அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. எவ்வளவு தெரியுமா
ஜான்வி கபூர்
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் 2018ம் ஆண்டு வெளிவந்த தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்தார். முதல் படமே அவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை இங்கு பெற்று தந்தது.
சம்பளம்
இதை தொடர்ந்து தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் புச்சி பாபு இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஜான்பி கபூர், தனது சம்பளத்தை ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தியுள்ளாராம். மேலும் பெத்தி திரைப்படம் வெளிவந்த பின், இன்னும் சம்பளம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
