நடிகை ஜான்வி கபூரின் காதலர் இவர் தான்.. கழுத்தில் அந்த விஷயம்! நெருக்கமாக இருக்கும் புகைப்படம்

Kathick
in பிரபலங்கள்Report this article
ஜான்வி கபூர்
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இளம் வயதிலேயே இந்தியளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் தற்போது தென்னிந்திய சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆம், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கும் தேவாரா திரைப்படத்தின் கதாநாயகி ஜான்வி கபூர் தான். இப்படத்தை தொடர்ந்து ராம் சரணின் 16வது திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.
ஜான்வி கபூரின் காதலர்
ஜான்வி கபூர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தையுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் கழுத்தில் இருக்கும் நெக்லெஸில் Shiku என இருப்பதை நெட்டிசன்கள் கவனித்துள்ளனர்.
இதன் மூலம் ஜான்வி கபூரின் காதலர் shikhar pahariya உறுதியாகியுள்ளது என பாலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. மேலும் ஜான்வி கபூர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..