பாதி தமிழ், பாதி மலையாளி.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த ஜான்வி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பரம்சுந்தரி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
கேரளா பெண் மற்றும் டெல்லி பையன் ஆகியோர் காதலித்தால் என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கதை.
இப்படி ஒரு கதையில் ஜான்வி கபூரை நடிக்க வைத்து இருப்பது பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர். கேரள நடிகைக்கு இந்த வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.
நானும் பாதி மலையாளி தான்
இந்நிலையில் இதற்கு பதில் கொடுக்கும் வகையில் ஜான்வி கபூர் தற்போது பேசி இருக்கிறார். "நான் மலையாளி இல்லை, என் அம்மாவும் இல்லை. ஆனால் படத்தில் வரும் கதாபாத்திரம் பாதி தமிழ், பாதி மலையாளி" என ஜான்வி கூறி இருக்கிறார்.
இதன் மூலம் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் அவர்.