புஷ்பா 2க்கு ஆதரவாக வந்த ஜான்வி கபூர்.. என்ன கூறி இருக்கிறார் பாருங்க
புஷ்பா 2 படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தியா முழுவதும் 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளிவந்து இருக்கிறது.
முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனையை புஷ்பா 2 படைத்து இருக்கிறது.
ஜான்வி கபூர் பதிவு
இந்தியாவில் இருக்கும் அனைத்து IMAX தியேட்டர்களில் தற்போது புஷ்பா 2 தான் திரையிடப்பட்டு இருக்கிறது. அதனால் ஹாலிவுட் படமான இன்டர்ஸ்டெல்லர் இந்தியாவில் மட்டும் ரிலீஸ் ஆக வில்லை. அதனால் அந்த படத்தின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இது பற்றி இன்ஸ்டாவில் வந்த பதிவுக்கு நடிகை ஜான்வி கபூர் கமெண்ட் செய்து இருக்கிறார். "புஷ்பா 2ம் சினிமா தான். மேற்கத்திய படங்களை கொண்டாடும் நீங்கள், சொந்த நாட்டில் இருந்து வரும் படங்களை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என ஜான்வி கூறி இருக்கிறார்.
அவரது கமெண்ட் இதோ..