அம்மாவின் இளமை ரகசியம் இதுதான்.. வெளிப்படையாக கூறிய நடிகை ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அடுத்ததாக பெத்தி திரைப்படம் தெலுங்கில் வெளிவரவிருக்கும் நிலையில், விரைவில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப்போவதாக பேசப்படுகிறது. ஜான்வி கபூரின் தமிழ் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஸ்ரீதேவி அழகின் ரகசியம்
80ஸ் காலகட்டத்தில் மிகவும் அழகிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய அழகு மற்றும் இளமையின் ரகசியம் என்னவாக இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. இந்த நிலையில், தனது அம்மாவின் அழகின் ரகசியம் குறித்து நடிகை ஜான்வி கபூர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதில் "எங்கள் வீட்டில் காலை உணவில் பழங்கள் தவறாமல் இடம்பெறும். மீதமிருக்கும் பழங்களை ஜூஸாக்கி அம்மா முகத்தில் தேய்த்துக்கொள்வார். சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மாறிவிடும். இந்த பழக்கத்தை அம்மா தொடர்ந்து கடைப்பிடித்தார்" என கூறியுள்ளார்.