துளியும் கிளாமர் இல்லை.. தமிழ் புத்தாண்டுக்கு ஜான்வி கபூர் செய்ததை பாருங்க
ஜான்வி கபூர்
இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர் ஜான்வி கபூர். பாலிவுட் மூலம் அறிமுகமான இவர் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தற்போது ராம் சரணின் பெத்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் வெப் சீரிஸிலும் ஜான்வி நடிக்கப்போவதாகவும், இது அவரது தமிழ் அறிமுகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ரசிகர்கள் மத்தியில் ஜான்வி கபூர் பிரபலமாக முக்கிய காரணங்களில் ஒன்று அவரது கிளாமர் போட்டோஷூட். தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
புத்தாண்டு வாழ்த்து
ஆனால், இன்று அழகிய புடவை அணிந்து மிகவும் அடக்க ஒடுக்கமாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவும் தமிழில் பேசி அவர் கூறிய வாழ்த்து வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..

