ஜான்வி கபூருடன் கைகோர்க்கும் லியோ படம் பிரபலம்.. யார் தெரியுமா
ஜான்வி கபூர்
பாலிவுட் மூலம் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களை சேர்த்துள்ளார் நடிகை ஜான்வி கபூர். இவர் நடிப்பில் Ulajh மற்றும் தேவரா முதல் பாகம் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தது.
ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூருக்கு தேவரா திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து ராம் சரண் உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தமிழிலும் அறிமுகமாவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ரீமேக் படத்தில் ஜான்வி கபூர்
ஜான்வி கபூரின் அடுத்த படம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் ஈரம். அறிவழகன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆதி ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், ஈரம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யபோகிறார்களாம். 2009ல் வெளிவந்த இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான், தற்போது ரீமேக் படத்தை இயக்கப்போவதாகவும், அப்படத்தில் ஜான்வி கபூர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. மேலும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தளபதி விஜய்யின் லியோ, பீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
