மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து அவரின் மகள் ஜான்வி கபூர் வெளியிட்ட எமோஷனல் பதிவு!
பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர், இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனி கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் செம பிஸியான நடிகையாக உள்ள ஜான்வி கபூர் விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இன்று பிப்ரவரி 24 ஆம் தேதி நடிகை ஸ்ரீதேவியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் என்பதால் ஜான்வி கபூர் அவரின் அம்மா குறித்து எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் "உங்களுடன் வாழ்ந்த அதிக ஆண்டுகளை நான் இன்னும் நீங்கள் இல்லாமல் வாழவில்லை. ஆனால் நீங்கள் இல்லாத வாழ்க்கையில் இன்னொரு வருடம் சேர்ந்திருப்பதை நான் வெறுக்கிறேன்.
நாங்கள் உங்களைப் பெருமைப்படுத்துவோம் என்று நம்புகிறேன் அம்மா, ஏனென்றால் அதுதான் எங்களைத் முன் நகர்த்த வைக்கிறது" என அன்ஸீன் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.