ஜப்பானில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் தர்பார் படம், மாஸ் காட்டும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினி பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கூட்டம் குறித்து அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் தர்பார்.
ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வசூல் சாதனைகளை படைக்க தவறியது.
இந்நிலையில் தற்போது ஜப்பானில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள தர்பார், அங்கு அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வசூல் வேட்டை நடத்தி வருகிறது தர்பார் திரைப்படம்.
மேலும் இது குறித்த வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.
All housefull shows for #Darbar from today to 21st at Japan #MKC plex?✨❤️?????#DarbarThiruvizhaJapan #SuperstarRajinikanth #Superstar @rajinikanth @ARMurugadoss @LycaProductions @anirudhofficial #Nayanthara @SunielVShetty@i_nivethathomas @iYogiBabu @V4umedia_ pic.twitter.com/am4ByybUbc
— RIAZ K AHMED (@RIAZtheboss) July 18, 2021