விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதை இதுவா.. கசிந்த தகவல்
நடிகர் விஜய் தற்போது கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருப்பதை தாண்டி தற்போது அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். அரசியலுக்காக படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்த போவதாகவும் அறிவித்துவிட்டார் அவர்.
அது ஒருபுறம் இருக்க விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

கதை
இந்த படத்தில் ஹீரோவாக விக்ரம் மகன் துருவ் நடிக்கப்போகிறார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கடந்த சில மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் அது உறுதியாகும்.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் வைத்திருக்கும் கதை பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையாம். ஏற்கனவே கிரிக்கெட் பற்றிய கதைகள் தமிழில் பல வந்திருக்கின்றன, விஜய்யின் மகன் எடுக்கப்போகும் கதை எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri