தனது முதல் படத்திற்கு கதாநாயகியை தேர்வு செய்த ஜேசன் சஞ்சய்... யாரு தெரியுமா?
ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
அவரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிகராக களமிறங்கி ராஜ்ஜியம் செய்பவர் விஜய். இவர் இப்போது சினிமாவில் இருந்து சுத்தமாக விலகி அரசியல் களம் இறங்கி உள்ளார்.
இந்த நேரத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக என்ட்ரி கொடுக்கிறார்.
நாயகி
ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் எடுக்க உள்ளார்.
தனது படத்தின் நாயகனை தேர்வு செய்ய நேரம் எடுத்த சஞ்சய் பட அறிவிப்பு வந்த பல மாதங்களுக்கு பிறகு தான் நாயகன் யார் என்ற தகவல் வந்தது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் நாயகன் சுந்தீப் கிஷன் தான், கோகுலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.
2021ம் ஆண்டு ஜதி ரத்னாலு படத்தில் நாயகியாக நடிக்க துவங்கிய பரியா அப்துல்லா தான் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறாராம்.