அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல! ஜேசன் சஞ்சய் வெளியிட்ட அறிக்கை
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். அடுத்து அவர் ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகள் பற்றி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

போலி கணக்குகள்.. நான் பொறுப்பல்ல
அறிக்கையில் குறிப்பிட்ட கணக்குகள் தவிர, என் பெயர், புகைப்படம் அல்லது எனது அடையாளத்தை பயன்படுத்தி இயங்கும் மற்ற அனைத்து கணக்குகளும், பக்கங்களும் முற்றிலும் போலியானவை.
வேறு எந்தக் கணக்குகளிலிருந்தும் வரும் பதிவுகள், கருத்துகள் (கமெண்ட்ஸ்), நேரடி செய்திகள் (மெசேஜ்கள்) அல்லது வணிக தொடர்புகளுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல என ஜேசன் சஞ்சய் கூறி உள்ளார்.
மேலும் அவர் பெயரில் அதிகாரபூர்வ ரசிகர் மன்றம் என்ற பெயரில் இயங்குவதும் போலியானது தான் என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri