நடிகராக தடம் பதித்து வரும் ஜெயம் எஸ்.கே.கோபி
திரையரங்கு குத்தகைதாரராக திரையுலகிற்குள் நுழைந்து, விநியோகஸ்தராகவும், பின்னர் தயாரிப்பாளராகவும் முன்னேறி, நடிகராக தற்போது தனக்கென தனி பாணியில் தடம் பதித்து வருகிறார் ஜெயம் எஸ்.கே.கோபி.
காஞ்சனா 3 மூலம் ராகவா லாரன்ஸால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயம் எஸ்.கே.கோபி, திரௌபதி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான ருத்ரதாண்டவத்தில் படம் முழுவதும் வரும் காவல்துறை அதிகாரியாக மிகவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவரது நடிப்பு பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்தகன், ஜகா, கோபி நயனார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்ட சுமார் 10 பத்து படங்களில் ஜெயம் எஸ்.கே.கோபி தற்போது நடித்து வருகிறார். கனவே கலையாதே உள்ளிட்ட மூன்று வலைத் தொடர்களிலும் (வெப் சீரிஸ்) இவர் நடித்துள்ளார்.
“ருத்ரதாண்டவம் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து நடிகர் ராதாரவி, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். அனைத்து பெருமையும் இயக்குநர் மோகன் ஜி-யையே சாரும். திரௌபதி, ருத்ரதாண்டவம், கனவே கலையாதே ஆகியவற்றில் காவல் அதிகாரியாக நடித்திருந்தாலும், அனைத்து விட கதாபாத்திரங்களிலும் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதற்கேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜெயம் எஸ்.கே.கோபி.

புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri