ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கு... நீதிமன்றம் புதிய உத்தரவு
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி 22 வருடங்களாக சினிமாவில் டாப் நாயகனாக வலம் வருபவர் ஜெயம் ரவி.
ஹேட்டர்ஸ் இல்லாத நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வாழ்க்கையில் கடந்த வருடம் என்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும். அதாவது தனது மனைவி ஆர்த்தியை பிரிய முடிவு எடுக்க பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது புதிய வருடம் தொடங்கியதும் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டுள்ளார். அதோடு தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றி அதன்மூலம் பலருக்கு உதவி செய்ய உள்ளாராம்.
நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்க உள்ளார்.
நீதிமன்றம்
கடந்த வருடம் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு இவர் தொடர்ந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர்களது வழக்கு பல விசாரணைகளுக்கு பிறகு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் ரவி மற்றும் ஆர்த்தி இருவருமே காணொளி வாயிலாக ஆஜராகினர். இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
உடனே நீதிபதி சமரச பேச்சு வார்த்தையை நிறைவு செய்த பின்னர், வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று கூறி ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கை, பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளி வைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
