ஒரு பெண் இடத்தில் இருந்து யோசிக்கவில்லை.. இதுதான் காரணம், ஜெயம் ரவி ஓபன்
ஜெயம் ரவி
ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. முதல் படம் கொடுத்த வெற்றியின் காரணமாக தனது பெயரை ஜெயம் ரவி என்று மாற்றிக்கொண்டார்.
அப்படத்தின் வெற்றிக்கு பின், அடுத்து எம்.குமரன் S/o மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், அடங்க மறு, மிருதன், கோமாளி, பொன்னியின் செல்வன் என தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.
கடைசியாக இவரது நடிப்பில் பிரதர் படம் வெளியானது ஆனால் சரியாக படம் ஓடவில்லை. தற்போது, ஜெயம் ரவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நித்யா மேனனுடன் இணைந்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஜனவரி 14 பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
அப்போது பத்திரிகையாளர்கள் படத்தின் போஸ்டரில், ஜெயம் ரவியின் பெயருக்கு முன்னால், நித்யா மேனனின் பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
ஜெயம் ரவி ஓபன்
அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, " நன் முதன் முதலாக ஒரு பெண் இயக்குனருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். இதுவரை எனக்கு இருந்த பார்வையை அவர் மாற்றிவிட்டார்.
எப்போதும் ஒரு ஆணின் பார்வையில் இருந்தே, அனைத்தையும் அணுகிப் பழகிய எனக்கு பெண்ணின் பார்வை குறித்து கிருத்திகா உதயநிதி சொல்லிக் கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
