விஜய் அண்ணா ஜெயிச்சிட்டீங்க, ஜெயம் ரவி போட்ட சூப்பர் பதிவு... செம வைரல்
ஜனநாயகன்
தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் ஜனநாயகன்.
விஜய் நடித்துள்ள படம் என்றாலே மிகவும் ஸ்பெஷலாக பார்ப்பார்கள் ரசிகர்கள், அதிலும் இந்தப்படம் அவரது கடைசிப்படம், எனவே ரசிகர்கள் திரையரங்கில் இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு முடிவோடு இருக்கிறார்கள்.
எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெட்ச் நாயகியாக நடித்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்டத்தின் உச்சமாக இசை வெளியீடு நடந்து முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியானது.
வரும் ஜனவரி 9ம் தேதி படமும் வெளியாகவுள்ளது, அந்த நாளுக்காக தளபதி ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
ஜெயம் ரவி
டிரைலர் வெளியானதும் ரசிகர்கள் கொண்டாடி வர பிரபலங்கள் தரப்பில் இருந்து இதுவரை ஒருவரும் பெரிய அளவில் பேசவில்லை.

இந்த நிலையில் நடிகர்களில் முதல் ஆளாக ரவி மோகன், ஜனநாயகன் படத்தையும் விஜய்யையும் வாழ்த்தி பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், தளபதி வெற்றி கொண்டான், விஜய் அண்ணா என்னை பொறுத்தவரை நீங்கள் ஏற்கனவே அனைத்திலும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். ட்ரெய்லர் சூப்பராக இருக்கிறது.
இந்தப் படம் என்னையும் சேர்த்து பலரது இதயங்களை வெல்லும் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது. எப்போதும் உங்கள் ரசிகனாக, சகோதரனாக என குறிப்பிட்டுள்ளார்.