எல்லாத்துக்கும் ஒரே எக்ஸ்பிரஷன்.. முன்னணி ஹீரோவை தாக்கி கிண்டல் செய்த ஜெயம் ரவி! யாராக இருக்கும்?
ஜெயம் ரவி
பொன்னியின் செல்வன் படம் தற்போது வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. ஐந்து நாட்களில் 270 கோடி ருபாய் வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தில் நடித்த நடிகர்கள் ஜாலியாக பேசும் ஒரு நிகழ்ச்சியை லைகா வெளியிட்டு இருக்கிறது.
அதில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் பேசி இருக்கின்றனர். அப்போது ஜெயம் ரவி சொன்ன ஒரு விஷயத்தை எல்லோர் முன்னிலையில் போட்டுடைத்தார் விக்ரம்.
Expression வரல..
விமானத்தில் செல்லும்போது ஒரு படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஜெயம் ரவி அந்த நடிகர் பற்றி ஒரு கருத்து கூறினார். 'அந்த நடிகர் அம்மா செத்தாலும் ஒரே எக்ஸ்பிரஷன், பூ கொடுத்து லவ் சொன்னாலும் அதே எக்ஸ்பிரஷன், ஊரை விட்டு ஓடினாலும் அதே எக்ஸ்பிரஷன் தான் கொடுக்கிறார்' என ஜெயம் ரவி கூறினார்.
"அவர் என் friend" என சொன்ன பிறகும், அப்படி பேசினார் என விக்ரம் கூறி இருக்கிறார். அது யாராக இருக்கும்? என நெட்டிசன்கள் தற்போது Guess செய்து வருகிறார்கள். இந்த வீடியோவை 7.30 நிமிடங்களில் பாருங்க.