கோமாளி படத்திற்கு நடிகர் ஜெயம் ரவி முதல் சாய்ஸ் இல்லையா, வேறு யாரு தெரியுமா?
கோமாளி படம்
தமிழ் சினிமாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் கோமாளி.
பெரிய ஹிட் சில படங்களுக்கு பிறகு ஜெயம் ரவி கொடுத்தது இந்த படத்தின் மூலம் தான். அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
முதல் சாய்ஸ்
ஜெயம் ரவி திரைப்பயணத்தில் முக்கிய படமாக கோமாளி அமைந்தது. ஆனால் இதில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகராம். இயக்குனர் கதையை ஒருவரை மனதில் வைத்து எழுத தொடங்குவதும், பின் நிறைய சில காரணங்களால் மாற்றங்கள் நடந்து கடைசியில் நடிப்பது வேறொருவராக இருக்கும்.
அப்படி தான் இந்த கோமாளி படத்திற்கும் நடந்துள்ளது. கோமாளி படத்தில் முதலில் நடிக்க வைக்க இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.ஜே.பாலாஜியிடம் தான் முதலில் கேட்டுள்ளனர்.
இந்த படம் நடிக்காதது குறித்து ஆர்.ஜே.பாலாஜி ஒரு பேட்டியில், கோமாளி படத்தில் நான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் என்னிடம் கூறினார்.
ஆனால் அதற்கு முன்பு வரை நான் ஹீரோவாக நடித்தது இல்லை, இந்த பெரிய படத்தில் நான் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
அதனால் தான் கோமாளி பட வாய்ப்பை நான் நிராகரித்தேன், இருப்பினும் கோமாளி மிகப்பெரிய வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி எனக் கூறினார்.