ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படத்தின் முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- எவ்வளவு பாருங்க
சைரன் படம்
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
அப்படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து நிறைய விளம்பரங்கள் நடித்தார், அதற்கு கோடியில் சம்பளம் பெற்றார் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால் அந்த வெற்றிப் படத்திற்கு பிறகு இறைவன், அகிலன் படங்கள் வெளியாகி இருந்தது, இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சரியான வரவேற்பு பெறவில்லை.

பாக்ஸ் ஆபிஸ்
இந்த நேரத்தில் தான் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்த சைரன் திரைப்படம் வெளியாகியது. நேற்று (பிப்ரவரி 16) வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் வந்துள்ளது.
முதல் நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 3.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri