ஆர்த்தி வெளியிட்ட பதிவு.. குஷ்பு மற்றும் சைந்தவி கூறிய அதிரடி வார்த்தை என்ன தெரியுமா
ஜெயம் ரவி - ஆர்த்தி
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து குறித்து தான்.
இருவரும் மாறி மாறி தங்கள் பக்கம் உள்ள கருத்துக்களை வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில், ஜெயம் ரவி அவர் மனைவி தன்னை மிகவும் மோசமாக நடத்தியதாகவும், அவருக்கென்று தனி வங்கி கணக்கு கூட இல்லை என்றும் பல விதமான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்
இந்நிலையில், நேற்று இந்த அறிவிப்பை மறுத்து ஆர்த்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அறிக்கையை பதிவிட்டுள்ளார்.
குஷ்பு மற்றும் சைந்தவி பதில்
அதில், "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், என்னை பற்றியும் தவறாக பேசுபவருக்கு நான் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருப்பதற்கு என்னுடைய பலவீனமோ அல்லது குற்ற உணர்ச்சியோ காரணம் அல்ல என்றும், நான் என் திருமணத்தின் மேல் வைத்துள்ள மரியாதை காரணமாக எதுவும் கூறாமல் இருந்தேன் என்றும், நான் ஜெயம் ரவியிடம் தற்போதும் பேச தயார்" என்றும் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆர்த்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்த அந்த அறிவிப்புக்கு குஷ்பு, “நீ மிகவும் தைரியமானவள்” என்றும், பாடகி சைந்தவி, “தைரியமாக இருங்கள் அக்கா.. உங்களுக்காக என் பிராத்தனைகள்” என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
