தெலுங்கு சினிமாவில் அம்மா நடிகை என்றால் நினைவுக்கு வரும் நடிகைகளில் ஜெயசுதாவும் ஒருவர். அவர் தமிழிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
விஜய்யின் வாரிசு படத்தில் அவர் அம்மா ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகன்
நடிகை ஜெயசுதாவுக்கு நிஹார் கபூர் என்ற மகன் இருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி தான் வைரல் ஆகி இருக்கிறது.
நிஹார் கபூர் தான் முதலில் பாகுபலி படத்தில் பல்லாலதேவா ரோலில் நடிக்க இருந்தாராம். 2-3 வாரங்கள் பயிற்சி பெற்று அவர் நடிக்க தயாராகி இருந்தாராம்.
ஆனால் ராணா படத்தில் இணைந்த பிறகு ராஜமௌலி அந்த ரோலை அவருக்கு கொடுத்துவிட்டாராம்.
அதன் பிறகு காலகேயா ரோலில் நடிக்கும்படி ராஜமௌலி நிஹாரை கேட்டாராம், ஆனால் அந்த ரோல் எனக்கு செட் ஆகாது என சொல்லி மறுத்துவிட்டாராம் நிஹார். அந்த ரோலில் நடித்து இருந்தால் தற்போது பேசப்படும் ஒரு நடிகராக தான் இருந்திருப்பேன் என நிஹார் கூறி இருக்கிறார்.