திரிஷ்யம் 3 படத்தை தடுத்து நிறுத்திய ஜீத்து ஜோசப்.. என்ன நடந்தது
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படம் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் அது ரீமேக் ஆனது. அதன் பின் வந்த இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
திரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடித்து இருந்தார்.
திரிஷ்யம் 3ம் பாகத்தை தடுத்து நிறுத்திய ஜீத்து ஜோசப்
மலையாளத்தில் திரிஷ்யம் 3ம் பாகம் இன்னும் தொடங்காத நிலையில், ஹிந்தியில் அதற்கு முன்பே எடுக்க அஜய் தேவ்கன் மற்றும் படக்குழு திட்டமிட்டு செயல்பட்டது.
ஆனால் அதற்கு ஜீத்து ஜோசப் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மீறி தொடங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்து இருக்கிறார். திரிஷ்யம் படம் தொடங்கியது மலையாளத்தில் தான், அதனால் இங்கு தான் முடிய வேண்டும் என கூறி இருக்கிறார்.
அதனால் திரிஷ்யம் 3ம் பாக பணிகளை ஹிந்தியில் நிறுத்தி இருக்கின்றனர்.