கொலை செய்துவிட்டதாக கூறி கைது செய்யப்படும் ஜீவா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ
ஜனார்த்தனன் - ஜீவா பிரச்சனை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனது மாமனாருக்கும் ஜீவாவிற்கு இடையே சில பிரச்சனை ஏற்பட்டது.
மீண்டும் ஒரு முறை ஜனார்த்தனன் எனது அண்ணன் ஜீவாவிடம் இப்படி செய்தால், கொன்றுவிடுவேன் என்றும் கதிர் எச்சரித்தார்.
மேலும் பிரஷாந்த் இடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என ஜனார்த்தனன் இடம் ஜீவா கூறியிருந்தார்.
பரபரப்பான ப்ரோமோ
முதலில் பிரஷாந்த் செய்யும் அனைத்தையுமே நம்பி வந்த ஜனார்த்தனன் தற்போது அவரை சந்தேகப்பட்டு கேள்வி கேட்டு தன்னுடைய பணம் அனைத்துமே திருப்பி கொடு என கேட்டார்.
இந்த வாக்குவாதம் சண்டையில் முடிய, ஜனார்த்தனனின் நண்பரையும், ஜனார்த்தனனையும் கத்தியால் குத்துவிட்டு காவல் துறையிடம் இதை ஜீவா செய்ததாக நாடமாடுகிறார் பிரஷாந்த்.
இதனால், போலீஸ் ஜீவா மற்றும் கதிரை கைது செய்கிறார்கள். இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.