பாக்கியலட்சுமியில் இருந்து முக்கிய நடிகை விலகல்? கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகை விலகுவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்யலட்சுமியில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருடன் சேர்த்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது பாக்யாவின் வீட்டில் வந்து தங்கி இருக்கிறது. விரைவில் கோபியின் அப்பா பிறந்தநாள் பார்ட்டி நடைபெற இருக்கிறது.
ஜெனி 'திவ்யா கணேஷ்' வெளியேறிவிட்டாரா?
பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் மருமகள் ஜெனி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் தற்போது அதில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வந்திருக்கிறது.
அவரது போட்டோவை பதிவிட்டு நடிகை நேஹா மேனன் 'உன்னை மிஸ் செய்வேன்' என தெரிவித்து இருக்கிறார். இதனால் தான் தற்போது ஜெனி பாக்யலட்சுமியில் இருந்து வெளியேறுவதாக தகவல் பரவுகிறது.

திவ்யா கணேஷ் தற்போது செல்லம்மா என்ற புது தொடரில் முக்கிய ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.