பாக்கியலட்சுமி சீரியலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகை- அதிர்ச்சி வீடியோ
பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப பெண்கள் தங்களது குடும்பத்திற்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை இந்த தொடர் தெளிவாக காட்டுகிறது.
இப்போது ஒரு முக்கிய பிரச்சனை குறித்து தொடர் பேசியுள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இறக்கின்றனர்.
இது மக்களின் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியுள்ளது. நிஜத்தில் நடப்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதையில் இதுபற்றி பேசியுள்ளனர்.
சீரியலில் இனியாவுக்கும் தோழிகளுக்கும் ஒரு ஆசிரியர் சில மோசமான தொந்தரவை கொடுக்கிறார், இதனால் இனியாவின் தோழி ஒருவர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்.
வீட்டில் சொல்லவும் முடியாமல் பள்ளிக்கு வர முடியாமல் தவிக்கிறார், இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. பின் புரொமோவில் இனியா தனது தோழி தற்கொலை செய்துகொண்டதாக வீட்டில் கூறி அழுகிறார்.
இந்த அதிர்ச்சி புரொமோவை பார்த்த மக்கள் பலர் தங்களது மகள்களுக்கு இந்த விஷயம் குறித்து புரிய வைக்க வேண்டும் என கமெணட் செய்து வருகிறார்கள்.