ஜென்ம நட்சத்திரம் திரைவிமர்சனம்
ஒரு நொடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் தமன் குமார் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். இப்படத்தை இயக்குநர் மணிவர்மன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மல்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
கர்ப்பமாக இருக்கும் கதாநாயகிக்கு அமானுஷ்யமான விஷயங்கள் கவனில் தொடர்ந்து வருகிறது. காதநாயகன் சினிமாவில் நல்ல இயக்குனர் ஆகவேண்டும், தனது முதல் படத்தை தான் நினைத்தது போல் எடுக்க வேண்டும் என போராடி கொண்டு இருக்கிறார்.
இவர்களின் கதை ஒரு புறம் நகர, மறுபக்கம் ஒரு பிரபல அரசியல்வாதியிடம் வேலை செய்யும் காளி வெங்கட்கின் மகளுக்கு மருத்துவ அறுவை சிகிச்சைக்காக ரூ. 40 லட்சம் தேவைப்படுகிறது. இந்த பணத்தை அரசியல் வாதியிடம் கேட்கும் காளி வெங்கட்டுக்கு அவமானம் ஏற்படுகிறது.
இதனால் அரசியல்வாதியின் கருப்பு பணத்தை கடத்தி விடுகிறார் காளி வெங்கட். இதனால அந்த அரசியல்வாதியின் ஆட்களால் கொல்லப்படுகிறார். இறக்கும் முன்பு கடத்திய பணத்தை தான் புதுசேரி செல்லும் வழியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் மறைத்து வைத்துள்ளதாக ஹீரோ மற்றும் நண்பர்களிடம் சொல்லி விட்டு, தனது மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கூறிவிட்டு இறந்து விடுகிறார்.
ஹீரோவும் நண்பர்களும் அந்த பழைய கட்டடத்திற்கு செல்கிறார்கள். அங்கு எதோ ஒரு அமனுஷ்யத்தால் ஒவ்வொருவாக மரணிக்கின்றனர். இதற்கு எல்லாம் யார் காரணம், யார் இந்த கொலைகளை செய்கிறது, தேடி சென்ற பணம் கிடைத்ததா இல்லையா? அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதா என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
காதநாயகன், கதாநாயகி உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. பரபரப்பு நிறைந்த சூழலை தங்களது நடிப்பின் மூலம் திரையில் சிறப்பாக காட்டியுள்ளனர். நடிகர் மற்றும் நடிகைகளின் நடிப்பில் எந்த ஒரு குறையும் இல்லை.
ஆங்கிலத்தில் வெளிவந்த ஓமன் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ஜென்ம நட்சத்திரம். அதனை தமிழ் ஆடியன்ஸுக்கு பிடிப்பது போல், எமோஷ்னளுடன் கலந்த ஹாரர் ட்ராமாவாக இப்படத்தை சிறப்பாக திரையில் வழங்கியுள்ளார் இயக்குநர் மணிவர்மன்.
சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், அது பெரிதாக திரைக்கதையை பாதிக்கவில்லை. அதே போல் கிராபிக்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏனென்றால் இப்படி ஒரு கதைகளத்திற்கு கண்டிப்பாக நல்ல கிராபிக்ஸ் இருந்திருந்தால் படம் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும்.
கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சிறப்பு. விருவிறுப்பான திரைக்கதை, திகில் மூட்டும் ஹாரர் மூவ்மெண்ட்ஸ், சாத்தன் குறித்து காட்டப்பட்ட திகில் காட்சிகள் அழகாக படத்தை வடிவமைத்துள்ளார்.
இவை அனைத்தையும் பின்னணி இசை இன்னும் வலுவாக்கியுள்ளது. ஹாரர் படங்கள் என்றாலே பின்னணி இசை தான் இரண்டாவது ஹீரோ. அதை இப்படத்தில் சிறப்பாக செய்துள்ளார் இசையமைப்பாளர் சஞ்சய். சவுண்டு எபெக்ட், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.
பிளஸ் பாயிண்ட்ஸ்
நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
திரைக்கதை
பின்னணி இசை
மைனஸ் பாயிண்ட்ஸ்
சில இடங்களில் ஏற்படும் தொய்வு
கிராபிக்ஸ்