கேஜிஎப் 2க்கு பயந்து ரிலீஸை தள்ளி வைத்த பிரம்மாண்ட படம்! கடைசி நேரத்தில் அதிர்ச்சி முடிவு
தமிழில் விஜய்யின் பீஸ்ட் ஏப்ரல் 13ம் தேதி மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. அதனை தொடர்ந்து 14ம் தேதி கன்னட படமான கேஜிஎப் 2 இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
தள்ளிப்போனது ஜெர்சி
மேலும் பாலிவுட்டில் ஷாஹித் கபூர் நடிப்பில் ஜெர்சி படமும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கடைசி நேரத்தில் படம் ஒரு வாரம் தள்ளிப்போவதாக அறிவித்து இருக்கின்றனர்.
அதனால் ஜெர்சி வரும் 22ம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கிறது.

கடைசி நேரத்தில் முடிவு
கேஜிஎப் 2 படம் வருவதால் ஆரம்பத்தில் இருந்தே பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் ஜெர்சி வசூலுக்கு பெரிய பாதிப்பு இருக்கும் என்றே கூறி வந்தனர். இந்த நிலையில் தான் ஜெர்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று இரவு படத்தினை தள்ளி வைக்கும் முடிவை எடுத்து இருக்கிறது.
#Xclusiv... BREAKING NEWS... #Jersey POSTPONED by one week... Will arrive in *cinemas* on 22 April 2022... The stakeholders arrived at the decision late last night. pic.twitter.com/7ZY5JU4zQV
— taran adarsh (@taran_adarsh) April 11, 2022