நான்கு நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. சிறப்பான தரமான சம்பவம்
ஜிகர்தண்டா
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 2023ல் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது.
ஆனால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது, அதனுடைய கதைக்கருவை வைத்து மட்டுமே இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
வசூல் விவரம்
இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நான்கு நாட்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உலகளவில் ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் எதிர்பார்த்ததை விட மாபெரும் வசூல் சாதனை செய்யும் என கூறப்படுகிறது. இதை கார்த்திக் சுப்ராஜ் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் 'சிறப்பான தரமான சம்பவம்' தான் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
