ஜிகர்தண்டா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு! முக்கிய ஹீரோ படத்துடன் மோதல்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய ஹிட் ஆன படம் ஜிகர்தண்டா. அந்த படத்தின் அடுத்த பாகத்தை ஜிகர்தண்டா டபுள் X என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜெ.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ரிலீஸ் தேதி
தற்போது Jigarthanda Double X படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று இருக்கிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
2023 தீபாவளி ஸ்பெஷலாக படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்து இருக்கிறார். தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கார்த்தியின் ஜப்பான் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
It's a WRAP for #JigarthandaDoubleX - see you in theatres this Diwali! #J2XShootWraps #DoubleXDiwali @offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh@kaarthekeyens @stonebenchers @5starcreationss @alankar_pandian @onlynikil @thinkmusicindia pic.twitter.com/6LXUITIAJ1
— karthik subbaraj (@karthiksubbaraj) July 3, 2023