ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இதுவரை வசூல்.. எவ்வளவு தெரியுமா
தீபாவளி அன்று வெளிவரும் படங்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே தனி எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு அவர்களுடைய எதிர்பார்ப்பை முழுமையாக சில திரைப்படங்கள் மட்டுமே பூர்த்தி செய்யும்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
அந்த வகையில் சமீபத்தில் தீபாவளி விருந்தாக வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த ஜிகர்தண்டா முதல் பாகத்தின் முன் நடக்கும் கதையாக தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை வடிவமைத்துள்ளார் கார்த்திக் சுப்ராஜ்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 52 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது.
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan