மாபெரும் வெற்றியடைந்து வசூல் வேட்டையை நிறுத்தாத ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. பாஸ் ஆபீஸ் ரிப்போர்ட்
சமீபத்தில் வெளிவந்த சில திரைப்படங்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், மற்ற சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
அப்படி எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் கார்த்திக் சுப்ராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்தது.
சில இடங்களில் கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீதி வைக்கப்பட்டாலும் கூட, பெரும்பாலும் படத்திற்கு நல்ல விமர்சனம் தான் கிடைத்தது.
அதே போல் மக்களிடம் இருந்து அமோக வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைந்துள்ளது.
பாஸ் ஆபீஸ் ரிப்போர்ட்
இந்நிலையில், உலக அளவில் இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மாபெரும் வெற்றியடைந்த பிறகும் இப்படம் வசூல் வேட்டையை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
