ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ
ஜீவாவின் அகத்தியா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் ராம், கற்றது தமிழ், கோ, நண்பன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிளாக் திரைப்படமும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வருகிற 28ம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அகத்தியா.
இப்படத்தை பாடலாசிரியரும், இயக்குநருமான பா. விஜய் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து ராஷி கன்னா, அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரர் அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.
படத்தின் பட்ஜெட்
இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அகத்தியா திரைப்படத்தை ரூ. 32 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார்களாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.