தனது மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ஜீவா- கலக்கலான புகைப்படங்கள் இதோ
நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் மிகவும் கூலான ஒரு நடிகர். அவரது பேட்டிகளை பார்த்தாலே தெரியும், எப்போது ஜாலியாக பேசுவார்.
தமிழில் 25 படங்களுக்கு மேல் நடித்தாலும் இன்னும் அவருக்கு பெரிய ஹிட் படம் அமையவில்லை என்பது ரசிகர்களின் வருத்தம். ஜீவா தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் 83 படம். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.
படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை, டிசம்பரில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் நடிகர் ஜீவா தனது மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார், அந்த புகைப்படங்களையும் அவரே இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.



பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri