வேட்டையன் படத்துடன் வெளிவந்த பிளாக் படத்தின் 7 நாட்கள் வசூல்.. ஜீவாவிற்கு வெற்றி கிடைத்ததா
பிளாக்
கடந்த வாரம் வேட்டையன் திரைப்படம் 10ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதை தொடர்ந்து 11ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் பிளாக்.
ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை என படம் பார்த்த அனைவருக்கும் மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பாலசுப்பிரமணி.
வசூல் விவரம்
இந்த நிலையில், கடந்த 6 நாட்களாக வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் பிளாக் திரைப்படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிளாக் திரைப்படம் கடந்த 6 நாட்களில் உலகளவில் ரூ. 5.6 கோடி வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. இனி வரும் நாட்களில் பிளாக் படத்திற்கு எந்த அளவிற்கு வசூல் எகிறும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
