லியோவிற்கு பதிலா பழைய படத்தை போட்ட திரையரங்கம்.. கடுப்பாகி ரகளை செய்த விஜய் ரசிகர்கள்!
லியோ
விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் இன்று பிரமாண்ட எதிர்பார்ப்புடன் வெளியானது.
தமிழ் நாட்டில் மட்டும் 850 க்கும் அதிகமான திரையரங்குகளில் லியோ படம் ரிலீஸாகி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
ரகளை செய்த ரசிகர்கள்!
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பிரியா தியேட்டரில் லியோ படம் திரையிடப்பட்டது. அப்போது லியோ படத்தின் சத்தம் இல்லாததால் ரசிகர்கள் சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திரையரங்க நிர்வாகிகள் லியோ படத்திற்கு பதிலாக ஜில்லா படம் போட்டு இருக்கிறார்கள்.
இதற்கு கடுப்பான விஜய் ரசிகர்கள் லியோ படத்தை போடுமாறு எழுந்து சென்று சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி உள்ளதாக ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.