ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஜித்தன் ரமேஷ்! ரிஸ்க் எடுத்து இப்படி நடிக்கிறாரா?
ஜித்தன் ரமேஷ்
ஜித்தன் படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் தான் ஜித்தன் ரமேஷ். அந்த படத்திற்கு பிறகு அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை. ஜித்தன் 2 என்ற பெயரில் அவர் எடுத்த படமும் தோல்வி அடைந்தது.
அதன் பின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட ஜித்தன் ரமேஷ் இன்னும் புகழ் பெற்றார். பிக் பாஸ் வீட்டில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது கூலாக கண்டுகொள்ளாமல் இருப்பது, பல நேரங்களில் எதுவும் செய்யாமல் படுத்துக்கொண்டிருப்பது என அவர் செய்த விஷயங்களை நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்தனர்.
தற்போது ஜித்தன் ரமேஷ் "ரூட் நம்பர் 17" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
குகையில் ஷூட்டிங்
இந்த படத்திற்காக தென்காசி அருகில் ஒரு மிகப்பெரிய குகை நிலத்துக்கு அடியில் அமைத்து அங்கு ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்கள்.
காற்றோட்டம் இல்லாத அந்த குகையில் 55 டிகிரி வெப்பநிலையில் தான் தொடர்ந்து 22 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி இருக்கின்றனர். அதில் ரிஸ்க் எடுத்து ஜித்தன் ரமேஷ் நடித்து கொடுத்திருக்கிறாராம்.
நீளமான முடி, தாடி வைத்து ஜித்தன் ரமேஷ் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இந்த படத்திற்காக மாறி இருக்கிறார்.