விஷால், ஆர்யா இல்லை.. அவன் இவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த அண்ணன்-தம்பி நடிகர்கள்
அவன் இவன்
பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா ஆகியோர் நடித்து இருந்த படம் அவன் இவன். அதில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார்.
இந்த படத்தில் நடித்த விஷால் மற்றும் ஆர்யா ஆகியோரின் நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்தது. அவர்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூட அந்த நேரத்தில் பேசினார்கள்.
முதலில் நடிக்க இருந்தது..
அவன் இவன் படத்தில் முதலில் நடிகர் ஜீவா மற்றும் அவரது அண்ணன் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தான் நடிக்க இருந்தார்களாம். ஆனால் தயாரிப்பாளர் தான் அவர்கள் வேண்டாம் என நீக்கிவிட்டு ஆர்யா மற்றும் விஷாலை கொண்டு வந்திருக்கிறார்.
இந்த தகவலை சமீபத்திய பேட்டியில் ஜித்தன் ரமேஷ் கூறி இருக்கிறார்.
6ம் வகுப்பு படிக்கும்போதே பிரபல கிரிக்கெட் வீரருடன் காதல்! உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா லட்சுமி