இதோ ஆரம்பமானது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நடன நிகழ்ச்சி Jodi- வெளியான புரொமோ, நடுவர்கள் இவர்களா?
விஜய் டிவி
விஜய் டிவியில் எத்தனையோ ஹிட் ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, அதில் ஒன்று தான் ஜோடி நம்பர் 1.
மிகவும் ஹிட்டான இந்த நடன நிகழ்ச்சி பல சீசன்கள் ஒளிபரப்பானது.
ஜோடி என்ற பெயரில் அக்டோபர் மாதம் 2006ம் ஆண்டு முதல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, பின் தொடர்ந்து 10 சீசன்கள் ஒளிபரப்பாக கடைசியாக 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒளிபரப்பாகி இருந்தது.
அதன்பிறகு எந்த ஒரு நடன நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகாமல் இருந்தது, இந்த நிலையில் தான் ஒரு புதிய அறிவிப்பு புரொமோவுடன் வந்துள்ளது.
புதிய புரொமோ
அதாவது ரசிகர்கள் கொண்டாடிய ஜோடி நடன நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட இருக்கிறதாம்.
அதற்கான புரொமோ வெளியாகியுள்ளது, அதில் நடன இயக்குனர் சாண்டி, நடிகை மீனா மற்றும் ஸ்ரீதேவி உள்ளனர். இதோ ஜோடி நடன நிகழ்ச்சியின் புரொமோ,