புதிய BMW கார் வாங்கிய விஜய் டிவியின் ஜோடி ஆர்யுரெடி நடன நிகழ்ச்சி பிரபலம்... யார் பாருங்க
விஜய் டிவி
சீரியல்களுக்கு பெயர் போனது சன் தொலைக்காட்சி என்றால் ரியாலிட்டி ஷோக்களுக்கு விஜய் டிவி தான் டாப்.
சூப்பர் சிங்கர், ஜோடி ஆர்யுரெடி, அதுஇதுஎது, ஸ்டார்ட் மியூசிக், டிக் டிக் டிக், குக் வித் கோமாளி 5 என ஏராளமான நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி நம்பர் 1 போல சமீபத்தில் ஜோடி ஆர்யுரெடி என்ற பெயரில் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
புதிய கார்
கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நடன நிகழ்ச்சி 29 எபிசோடுகள் ஒளிபரப்பாகியது. மீனா, ஸ்ரீதேவி, சாண்டி மாஸ்டர், லைலா, நிக்கி கல்ராணி போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வந்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக தனுஷ் மற்றும் ஜஸ்டினா தேர்வானர்கள். இதில் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு குரு இருந்தார்கள், அதில் ஒருவர் தான் வரதா.
இவர் நிறைய நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றிருக்கிறார், ரசிகர்களின் பார்வையும் இவர் மீது அதிகம் உள்ளது.
இந்த நிலையில் இவர் BMW கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.