John Deo திரை விமர்சனம்
John Deo திரை விமர்சனம்
அர்ஜுன் தாஸ், ஷிவானி நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் கிரைம் தில்லராக வெளிவந்துளல இந்த John Doe படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் நல்ல கிரைம் திரில்லராக வந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்
கதைக்களம் அர்ஜுன் தாஸ் சிறு வயதிலிருந்து தன் அப்பாவின் டார்ச்சரில் வளர்ந்து போலிஸ் ஆகிறார், ஆனால், வேலையில் பெரியளவில் கவனம் இல்லாமல் இருக்க ஒரு கார் ஆக்சிடண்ட் ஆகிறது, அதில் ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறக்கிறான்.

அதை தொடர்ந்து கதை இரண்டு மாதம் முன்பு செல்ல, அங்கு துபாயிலிருந்து ஒரு பேமிலி இங்கு வந்து செட்டில் ஆகிறது, அப்பா இல்லாத பேமிலியில் மகள்(ஹிருதய்), மகன்(லக்கி), அம்மா(தர்ஷனா) மட்டும் இருக்கின்றனர்.
ஒருநாள் இரவு லக்கி, ஹிருதய் ஐஸ்கிரீம் சாப்பிட போக, ஹிருதய் மிஸ் ஆகிறார், அதை தொடர்ந்து யார் அவரை கடத்தினார்கள், ஹிருதய் என்ன ஆனார் என்ற தேடலை நாயகி சச்சனா தொடங்குகிறார்.
ஆரம்பத்தில் காரில் இறந்த சிறுவன் தான் ஹிருதய் என அர்ஜுன் தாஸ் கேஸை முடிக்க, இதை ஹிருதய் அம்மாவிடம் சொல்லலாம் என அர்ஜுன் தாஸ் வர, அங்கு அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்க, இதன் பின் இந்த சிக்கல்கள் எல்லாம் எப்படி முடிச்சு அவிழ்கப்படுகிறது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அர்ஜுன் தாஸ் தான் தன் அப்பா வார்த்தையை பொய்யாக்க வேண்டும் என போராடும் போலிஸ் கதாபாத்திரம், அதே நேரத்தில் தான் செய்த ஒரு சிறு தவறு எவ்ளோ பெரிய விளைவுகளை உருவாக்குகிறது என்பதை உணர்ந்து அவர் அடுத்தடுத்து தேடலில் இறங்கும் காட்சிகள் சூப்பர்.
அதேபோல் இந்த கேஸ்-யை ஆரம்பத்தில் விசாரிக்கும் சச்சனா அப்படியே இந்த போலிஸ் கதாபாத்திரத்தில் கனகச்சிதம், அதிலும் ப்ரேம்-யை விசாரிக்க அவர் மிரட்டும் விதம் அதை தொடர்ந்து சாரா-வை விசாரிக்கும் இடம் என பல இடங்களில் கவனம் ஈர்க்கிறார்.

மேலும் தர்ஷனாவாக சிருஷ்டி, லக்கியாக சாரா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தின் ஆரம்பத்தில் கதை முன்னும் பின்னும் செல்வது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் போக போக கதைக்கு செட் ஆகி இண்டர்வெல் டுவிஸ்ட் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
படத்தின் இரண்டாம் பாதி யார் இந்த குழந்தைகளை கடத்தில் கொல்வது, எப்படி தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரே பேட்டர்னில் கொலை நடந்தது என்பதை அறிய அர்ஜுன் தாஸ், சச்சனா கூட்டணி களம் இறங்குகிறது.
அந்த தேடலில் பல மர்ம முடிச்சுக்கள் அவிழ்கிறது, ஆனால் அந்த மர்ம முடிச்சுக்களுக்கான காரணம் அன்பு என்ற பெயரில் மனிதர்களின் கொடூர குணத்தை காட்டுகிறது.
படம் ஒரு கிரைம் திரில்லருக்கான அத்தனை அம்சங்கள் இருந்தாலும் இடைவேளை தவிற எந்த ஒரு இடத்திலும் நம்மை ஷாக் வேல்யூ கொடுக்கவில்லை, அதிலும் கிளைமேக்ஸ் டுவிஸ்ட் நோக்கி கதை செல்லும் போது பெரிய பரபரப்பு என்று ஏதுமே இல்லை.
டெக்னிக்கலாக இசை, ஒளிப்பதிவு எல்லாமே நன்றாக இருந்தது, ஆனால் இரவு நேரத்தில் காரில் வீட்டிற்குள் போனால் ஜன்னல் வழியாக வெயில் அடிக்கிறது, எடிட்டிங் மிஸ்டேக் ஆ என தெரியவில்லை.
க்ளாப்ஸ்
நடிகர்கள், நடிகைகள் பங்களிப்பு இடைவேளை டுவிஸ்ட்
பல்ப்ஸ்
பெரிய பரபரப்பு இல்லாமல் நகரும் இரண்டாம் பாதி
மொத்தத்தில் இதுபோல் பல மலையாள படங்கள் நாம் பார்த்திருப்போம், அப்படி ஒரு ஸ்லோ கிரைம் திரில்லர் தான் இந்த ஜான் டோ, ஒன் டைம் வாட்ச்.