தல அஜித் குறித்து மனம் திறந்து பேசிய சார்பட்டா பரம்பரை வில்லன் - என்ன சொன்னார் தெரியுமா
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் இன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை.
இப்படத்தில் வெம்புலி எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தவர் நடிகர் John Kokken. நடிகர் John Kokken, பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரனின் கணவரும் ஆவர்.
இந்நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னணி நடிகர் அஜித் குறித்து மிகவும் சுவாரஸ்யமான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்
இதில் " எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி அஜித் சார். ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கவும், சிறந்த மனிதராகவும் மாற நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள்.இந்த "வெம்புலி" கதாபாத்திரத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன். லவ் யூ சார். " என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Thank you Ajith Sir #thalaajith for always motivating me and encouraging me to believe in myself. You inspire me to work harder each day and to become a better human being. I dedicate this character "Vembuli" to you Sir. Love you Sir.
— Highonkokken (@johnkokken1) July 22, 2021
Please watch #SarpattaOnPrime @PrimeVideoIN pic.twitter.com/43HDDAZgmh