இரண்டு நாட்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த ஜான் விக்.. ரெகார்ட் பிரேக்கிங்
ஜான் விக்
ஹாலிவுட் திரையுலகில் புகப்பெற்ற திரைப்படங்களில் ஒன்று ஜான் விக். கடந்த 2014ஆம் ஆண்டு Keanu Reeves நடிப்பில் இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது.
இதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2019ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளிவந்தது. மேலும் தற்போது இப்படத்தின் 4ஆம் பாகம் கடந்த 24ஆம் தேதி உலகமெங்கும் வெளிவந்தது.
மிரட்டலான ஆக்ஷன் கதைக்களத்தில் அமைந்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 617 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் ஜான் விக் 4.
மேலும் இந்தியாவில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்க்கு முன் வெளிவந்த ஜான் விக் மூன்று பாகங்களின் வசூலை இரண்டு நாட்களில் ஜான் விக் 4 முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் ரீமேக் ஆகும் நடிகை லவ் டுடே.. ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தானா

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
