ஜான் விக் 4 திரை விமர்சனம்
ஹாலிவுட் திரையுலகில் எப்போதும் ஒரு கதாபாத்திரத்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும். உதாரணத்திற்கு அயர்ன் மேன், பேட்மேன், ஜோக்கர் போன்று, அந்த வரிசையில் எந்த பவரும் இல்லாத சூப்பர் ஹீரோவாக ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்ட ஜான் விக் படத்தின் 4வது பாகம் தற்போது வெளிவந்துள்ளது, இந்த பாகம் எப்படி..பார்ப்போம்.
கதைக்களம்
ஜான் விக்கை கடந்த பாகத்தில் 8 குரூப் தேடுவது போலவும், வின்சடன் அவரை சுட, பல மாடி பில்டிங்கில் இருந்து கீழே விழுவார், ஆனால், அவர் தான் ஜான் விக் ஆச்சே, 100 மாடியிலிருந்து விழுந்தாலும், எழுந்து வருவார்.
அப்படி தன் அடுத்த வேட்டைக்கு தயாராகும் ஜான் விக், இவர் எங்கிருந்தாலும் கொல்ல வேண்டும், அவருக்கு உதபுவர்களையும் கொல்ல வேண்டும் என்று டேபுள் முடிவு செய்ய இவை அனைத்தையும் ஜான் எப்படி முறியடித்தார் என்பதன் ஆக்ஷன் அதகளமே இந்த ஜான் விக்.
படத்தை பற்றிய அலசல்
ஜான் விக் கதாபாத்திரத்தில் கெய்னு ரிவஸ், எப்போதும் போல் அசரடித்துள்ளார், அதிலும் கிளைமேக்ஸ் ஒரு மணி நேரம் சண்டைக்காட்சி டோர் இல்லாத காரில் வரும் ஸ்டெண்ட், துப்பாக்கி, கத்தி என ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
ஜான் விக்கை தாண்டி ஏன் ஜான் விக்கை விட ஒரு படி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது இந்த படத்தில் கெயின் தான். கண் தெரியாத ஒரு கூலிப்படையாக ஜான் விக்கை அவர் கொல்ல வருகிறார். அட இவர் என்ன செய்து விடுவார் என்று பார்த்தால், ஜான் விக்கே முடியாமல் அவரிடம் இருந்து தப்பி ஓட வைக்கிறார், அதிலும் முதல் சண்டைக்காட்சியில், அலராம் செட் செய்து அவர் அடிக்கும் தந்திரம் விசில் பறக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம், ஸ்டெண்ட் காட்சிகள், அதை படப்பிடித்த ஒளிப்பதிவு, அதற்கு பக்க பலமாக இசை என அனைத்தும் தூள். கிளைமேக்ஸ் ஏதோ ஆக்ஷன் படம் போல் மட்டுமில்லாமல், ஜான் மற்றும் கெயின் இரண்டு நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் நேரில் மோதும் காட்சி எமோஷ்னலிம் செம்ம ஸ்கோர் தான்.
இதெல்லாம் முடிந்து கிளைமேக்ஸில் மிகப்பெரும் ஒரு சோகமும் ரசிகர்களுக்கு வரப்போவது உறுதி.
க்ளாப்ஸ்
சண்டைக்காட்சிகள், படத்தின் டெக்னிக்கல் பகுதி.
ஜான் விக், கெயின், வின்ஸ்டன் போன்ற கதாபாத்திரங்களின் நடிப்பு.
நோபடி என்ற கதாபாத்திரத்தில் நாயுடன் ஒருவர் வருவார், அவர் கதாபாத்திரமும் கிளைமேக்ஸில் அட என்று சொல்ல வைக்கின்றது.
பல்ப்ஸ்
ஜான் விக் ரசிகர்களுக்கு சரி, நார்மல் ஹாலிவுட் ரசிகர்களுக்கு முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கலாம்.
மொத்தத்தில் ஆக்ஷன் விரும்பிகளுக்கு தடபுடலான ஒரு புல் மீல்ஸ் விருந்து வைத்துள்ளார் ஜான் விக்.
3.5/5