ஜகமே தந்திரம் பட நடிகர் ஜோஜூ ஜார்ஜின் கார் கண்ணாடி உடைப்பு.. நிலவும் பரபரப்பு

car joju george
By Kathick Nov 02, 2021 01:10 PM GMT
Report

மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜோஜூ ஜார்ஜ் கொச்சியில் உள்ள சாலை ஒன்றில் மறியல் செய்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வு பரப்பாகியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கொச்சியில் உள்ள சாலை ஒன்றில் பிரபல அரசியல் கட்சியினர் மறியல் செய்ததால், அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்த வழியாக வந்த நடிகர் ஜோஜு ஜார்ஜும் அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். கடும் நெரிசலுக்கு இடையே தனது பொறுமை இழந்த ஜோஜு ஜார்ஜ், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சென்று போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறியுள்ளார்.

இதனால் கோபமான போராட்டக்காரர்கள் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். இந்த செய்தி தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜகமே தந்திரம் பட நடிகர் ஜோஜூ ஜார்ஜின் கார் கண்ணாடி உடைப்பு.. நிலவும் பரபரப்பு | Joju George Car Glass Broken

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US