அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் ஜோனிதா காந்தி.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

By Karthick Raja Nov 26, 2026 09:23 AM GMT
Report

Jonita Attended anirudh kavya wedding reception: இணையத்தில் பரவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் கலந்துகொண்டார் பின்னணி பாடகி ஜோனிதா காந்தி.

Box Office Scene: 20 நாள் முடிவில் சூர்யாவின் சீன் தமிழகத்தில் செய்த வசூல்...

Box Office Scene: 20 நாள் முடிவில் சூர்யாவின் சீன் தமிழகத்தில் செய்த வசூல்...

அனிருத் - காவ்யா மாறன்

இசையமைப்பாளர் அனிருத்துக்கும் தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் ஜோனிதா காந்தி.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி | Jonita Attended Anirudh Kavya Wedding Reception

இதன்பின் கடந்த 21-ஆம் தேதி சென்னையில் இவர்களுடைய திருமண வரவேற்பு விழா விமர்சையாக நடந்தது. மூன்று நாட்களாக நடந்த இந்த திருமண வரவேற்பில் முதலமைச்சர் விஜய், ரஜினி, ஸ்டாலின், அஜித், தோனி என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் கூட வெளியாகி வைரலானது.

அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் ஜோனிதா காந்தி.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி | Jonita Attended Anirudh Kavya Wedding Reception

இணையத்தில் பரவிய சர்ச்சை

அனிருத் - காவ்யா திருமணம் குறித்து அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்து பின்னணி பாடகி ஜோனிதா காந்தியையும் அனிருத்தையும் சம்பந்தப்படுத்தி சில விஷயங்கள் இணையத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டு வந்தன. ஜோனிதாவிற்கு காதல் தோல்வி என்றெல்லாம் சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பினர்.

அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் ஜோனிதா காந்தி.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி | Jonita Attended Anirudh Kavya Wedding Reception

இந்த நிலையில், திருமண வரவேற்பில் ஜோனிதா காந்தி பங்கேற்று அனிருத் மற்றும் காவ்யா மாறனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படம் வெளியாக, தன்னையும் அனிருத்தையும் இணைத்தவாறு சமூக வலைத்தளங்களில் பரவிய அனைத்து சர்ச்சைகளுக்கும் ஜோனிதா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US