நயன்தாரா மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் 'அரபிக் குத்து' சென்சேஷன் ஜோனிடா காந்தி!
விக்னேஷ் சிவன் மற்றும் நயனதாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரித்து வருகின்றனர்.
அந்த வகையில் அவர்கள் தயாரித்து வரும் படங்களில் ஒன்று வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம். அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக நடித்த கேகே என்கிற கிருஷ்ணகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.
மேலும் அவருக்கு ஜோடியாக அரபிக் குத்து பாடலின் மூலம் பிரபலமாகியுள்ள ஜோனிடா காந்தி கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
கனடாவில் வளர்ந்த பஞ்சாபி பெண்ணான இவரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவுக்கு பாடகியாக அறிமுகப்படுத்தினார். 2016-ல் சூர்யா நடிப்பில் வெளியான 24 படத்தில் ’மெய் நிகரா மெல்லிடையே’ என்ற பாடல் தான் ஜோனிடாவுக்கு முதல் தமிழ் பாடல்.
அதன்பின் செல்லம்மா வைரல் பாடலை பாடிய ஜோனிடா காந்தி, மீண்டும் அரபிக் குத்து பாடலின் மூலம் பெரியளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.