ஜீன்ஸ் டிஷர்ட் போட்டால் தவறு, உங்கள் பாரம்பரியம் என்ன?.. வனிதா மகள் ஜோவிகா பதிலடி
வனிதா
பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
வனிதா தற்போது தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ஜோவிகா மாடர்ன் உடையில் வந்திருந்தார். இதனால் இவர் உடை குறித்து பலர் ட்ரோல் செய்தனர்.
ஜோவிகா பதிலடி
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஜோவிகா இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், " நான் ஜீன்ஸ் டிஷர்ட் போட்டால் பாரம்பரியான உடையை அணியவில்லை என்பார்கள். பாவாடை சட்டை போன்ற பாரம்பரிய உடைகளை அணிந்தால் இந்தக் காலத்துக்கு தகுந்தபடி உடை அணியவில்லை என சொல்வார்கள்.
உங்களுடைய பாரம்பரியம் தான் என்ன? உங்கள் பாரம்பரியத்தை முதலில் காண்பியுங்கள் அப்புறம் பேசுங்கள்" என்று கூறியுள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
