ஜாய் கிரிசில்டா முதல் மகனின் தற்போதைய நிலைமை... வருந்தும் பிரபலம்
ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிசில்டா, தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்படும் ஒரு பிரபலம்.
பிரபல ஆடை வடிவமைப்பாளராக முன்னணி நடிகர்களின் படங்களில் எல்லாம் பணிபுரிந்து கவனம் பெற்று மிகவும் பிரபலமடைந்தார். ஆனால் இப்போது பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்டு நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.
முதலில் இயக்குனர் ஜெ ஜெ ஃபெட்ரிக்கை திருமணம் செய்த ஜாய் கிரிசில்டாவிற்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்றார்.

மகன் நிலை
முதல் கணவரை விவாகரத்து செய்ததே நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறியதால் விவாகரத்து செய்தேன் என ஜாய் கிரிசில்டா கூறி வருகிறார்.
இந்த நிலையில் முதல் கணவருக்கு பிறந்த ஜாய் கிரிசில்டாவின் முதல் மகன் ஜேடன் குறித்து பிரபல நடிகை ஷர்மிளா பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர், ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்த முதல் கணவருடைய குழந்தைதான் பாவம், அந்த பையனை முதலில் நல்ல மனநிலைமையோடு ஜாய் கிரிசில்டா வளர்க்கிறாரா, ஒரு தாயாக துரோகம் செய்கிறார்.
பையனுக்கு அப்பா பாசம்தான் கிடைக்கவில்லை, அம்மா பாசமாவது கிடைக்க வேண்டும். ரங்கராஜை தந்தை மாதிரி பழகவிட்டார், அவரை தந்தை என்றுதான் அழைப்பேன் என அந்தப் பையனும் ஒரு பேட்டியில் சொல்கிறான்.

இப்போது ரங்கராஜ் மூலம் ஒரு குழந்தையை பெற்றுவிட்டார், இப்போது முதல் கணவருக்கு பிறந்த மகனை ரங்கராஜ் மதிப்பாரா. இன்னொரு பக்கம் ஸ்ருதி-ரங்கராஜுக்கு பிறந்த மகன்களும் நிம்மதியை இழந்திருப்பார்கள் தான். ஆகமொத்தம் இதில் இந்தக் குழந்தைகள் தான் பாவம் என்றார்.