மாதம் செலவிற்கு மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை லட்சம் தர வேண்டும்... ஜாய் கிரிசில்டா
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாவில் சில படங்கள் நடித்துள்ளார்.
ஆனால் படங்கள் அவருக்கு பெரிய ரீச் கொடுக்கவில்லை, சொந்த தொழில் கைகொடுத்தது. எந்த ஒரு பிரபலத்தின் நிகழ்ச்சியோ, அரசியல்வாதியின் நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் இவரது சமையல் தான் இருக்கும்.
அந்த அளவிற்கு தொழில் ஆரம்பித்த வேகத்தில் மிகவும் பிரபலமானார். தனது தொழிலை அடுத்தடுத்த லெவலுக்கும் கொண்டு சென்று வருகிறார்.

புதிய மனு
இதற்கு இடையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை மறுமணம் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தான் கர்ப்பமாக இருப்பதால் ஆடை வடிவமைப்பாளர் வேலையை செய்ய முடியவில்லை என்றும் 7 மாத கர்ப்பமாக இருப்பதால் தன்னுடைய மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ. 6,50,000 பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.