கருவை கலைக்க சொல்கிறார், இரண்டு முறை தாக்கினார்.. CWC நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகார்
குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளர் உடன் அவர் தொடர்பில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியானது.
அதன் பின் அவர்கள் திருமண போட்டோக்களை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டு இருந்தார். அதன் பின் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.
மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
கருவை கலைக்க சொல்கிறார்
இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்து இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என புகாரில் கூறி இருக்கிறார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிரிஸில்டா பல அதிர்ச்சியான விஷயங்களை கூறினார். தான் கர்ப்பம் ஆன பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பார்க்க வருவது இல்லை, அவரை நான் இரண்டு முறை சந்தித்தபோது என்னை தாக்கினார்.
என் வயிற்றில் வளர்வது அவரது குழந்தை தான், அவர் கருவை கலைக்க சொல்கிறார் என ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார்.
இதுபற்றி மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.